Kaathalin vali (love pain poems)(10 poems)
Kaathalin vali (love pain poems)(10 poems)
1
பணம் உலகத்தை கவரும்,
அழகு உள்ளத்தை கவரும்,
என்னால் இந்த உலகத்தையும் கவர முடிய வில்லை, அவள் உள்ளதையும் கவர முடியவில்லை,
ஏன் என்றால் எனக்கு இந்த இரண்டுமே இல்லை....
2
பத்திரமாக இரு...
நீ எப்போதும் பத்திரமாக என்னோடு இருக்கத்தான் ..
இறைவன் இதயத்தை உள்ளே படைத்திருக்கிறான்...
3
நீ கிடைக்க மாட்டாய் என்று நன்றாகத்தெரியும்
என்றாலும் உன் துன்பநினைவுகளும் எனக்கு சுகம்தான்
எப்போதும் உன்னை நினைத்துக்கொண்டே இருப்பதற்கு....
4
சீக்கிரமே காதலில் விழுந்தோம்
உனக்கு நான்; எனக்கு நீயென
நம்பிக்கை வளர்த்தோம்.
எல்லாம் சில காலம்.
தெரிந்தே பிரிந்தோம்
புரியாமல் திரிந்தோம்.
அதிகம் பேசி
அதிஅதிகம் எதிர்பார்த்து
எதுவும் கிடைக்காமல்
சீக்கிரமே தேடுகிறோம்
அடுத்த காதலை!
5
காதல் ஆழமானது
அதை விட ஆழமானது
காதல் தரும் காயம்!
6
உனக்கு திருமணம் ஆக இன்னும் சிறு நாழிகையே உள்ளது,
இப்பொழுது நான் இதை கூறுகிறேன்
என் சிறு வயது காதலி நீ
நான் உன்னை காதலிக்கிறேன்
இனி நமக்குள் நட்பு மட்டுமே
நான் உன்னை வெறுக்கிறேன்
இதை ஏன் இப்பொழுது நான் உன்னிடம் கூறுகிறேன் என்றால்
உன் காதலை இனியும் நான் சுமக்க விரும்பவில்லை
உன் காதலை உன்னிடமே பத்திரமாக நான் திருப்பி கொடுத்து விட்டேன்
திருமண வாழ்த்துக்கள்......
7.
சில பெண்களுக்கு
நேர்மையான
ஆண்களைப்
பிடித்தாலும்,
ஏனோ,
பல பெண்களுக்கு
நேர்மையில்லா
ஆண்களைத்தான்
பிடிக்கிறது.....!!
8.
கவலை
--------------
நல்ல வாழ்வு
பற்றிய கவலை
மனதில் எவ்வளவு
இருந்தாலும்,
வெட்டி
பந்தாவிற்கு
மட்டும் குறைவே
இருக்காது இந்த
பெண்களுக்கு..
9
மீண்டும் ஒரு நேசம் தேவையில்லை,
மணிகணக்காய் பேசும் அவசியமில்லை,
கை கோர்த்து சுற்றி வரும் எண்ணமில்லை,
பரிசு பொருட்களின் பரிமாற்றங்கள் எதிர் பாக்கவில்லை,
சீண்டிவிடும் தீண்டல்கள்
லட்சியம் இல்லை,
எனக்கு தேவை ஒன்று மட்டும் தான்..!!
முழு ஆயுளில் என்றாவது ஒரு நாள்
என்னை இழந்ததற்கான ஆதங்கம்
உன் விழியில் தெரியும்..
அந்த ஒரு நொடி மட்டுமே.....
10
இமைகள் தாழ்ந்தன
விழிகள் அழுதன
என் முகம் நோக்காத,
உன் பார்வையினால்!!
Comments
Post a Comment